• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் 5 மாத குழந்தை மாரடைப்பு - லேகோலாந்தில் பெண் கைது!

பிரித்தானியாவின் லேகோலாந்தில் குழந்தைக்கு ஏற்பட்ட  மாரடைப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லேகோலாந்து விண்ட்சர் (Legoland Windsor) பொழுதுபோக்கு பூங்காவில் ஐந்து மாத கைக்குழந்தை மாரடைப்பு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் ஆபத்தான (Critical) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. டேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) தகவல் படி, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

இதையடுத்து, குழந்தை பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரி  ஜோ ஈல் (Zoe Eele) அவர்கள், "குழந்தையின் குடும்பத்தினருடன் எங்கள் அனைத்து சிந்தனைகளும் இருக்கின்றன. இது மனதை உருக்கும் சம்பவம். இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தினருக்கு முடிந்த அத்தனை ஆதரவையும் நாங்கள் வழங்கி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், Essex (எசெக்ஸ்)  மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், குழந்தையை கவனிக்காமல் விட்டதால் மோசமான காயம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தில் கடலோர காவல் தலைமையக சவாரி (Coastguard HQ ride) அருகில் சாட்சியங்கள்  எவரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் ஜூலை 26 வரை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் தற்போது வேறு யாரையும் காவல்துறை தேடவில்லை. 
 

Leave a Reply