• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா – பாலச்சந்தர் பிரிவுக்கு இது தான் காரணம்!.. பிரபலம் தெரிவித்த தகவல் 

சினிமா

பாலசந்தர் எப்போதுமே தன்னுடைய படத்திற்குக் கதையைத் தான் நாயகனாக நினைப்பார். அவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் வி.குமாருடன் தான் இசைப்பயணத்தைத் தொடங்கினார். வி.குமாரும், பாலசந்தரும் நாடக உலகில் தான் இணைந்து பயணம் செய்தார்களாம். அதை வைத்துத் தான் முதல் படத்துக்கே இசை அமைக்கிறார்.

அதன்பிறகு அவர்கள் படத்தில் இருந்து தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி வரை மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனுடன் கூட்டணி தொடர்கிறது. 76ல் இளையராஜா தமிழ்த்திரை உலகிற்கு வருகிறார். அவர் வந்தாலும் பாலசந்தர் அவரிடம் போகவில்லை. அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.

1985ல் இளையராஜாவுடன் சிந்து பைரவி படத்தில் தான் பாலசந்தர் இணைந்தார். அதன்பிறகு இருவரும் 6 படங்கள் தான் சேர்ந்து பணியாற்றினர். ஆனால் பாலசந்தரின் தயாரிப்பில் 14 படங்களுக்கு இளையராஜா இசை தான். 4 வருடங்களில் 6 படங்களே சேர்ந்து பணியாற்றிய ஜோடி ஏன் பிரிந்தது என்பது கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த 6 படங்களுமே பொக்கிஷங்கள் தான். சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் என பல படங்கள் செம மாஸ் ஹிட். அதிலும் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட் தான்.

புதுப்புது அர்த்தங்கள் தான் இருவருக்குமான கடைசி படம். இந்தப் படத்தில் தான் இருவருக்கும் சண்டை வருகிறது. 1989ல் இளையராஜா இசை அமைத்த படங்கள் மட்டும் 32.

10 நாளைக்கு 3 படம் பண்ண வேண்டும். அப்படி என்றால் இரவு பகலாக உழைக்க வேண்டும். பல படங்களும் தீபாவளிக்கு வர வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் காலகட்டம். இந்த நிலையில் பாலசந்தரும் நெருக்கடி கொடுக்க இவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சனையில் இளையராஜாவிடம் கேட்காமலேயே ரீ ரிக்கார்டிங் ஒர்க்கைப் போட்டு படத்தை ரிலீஸ் பண்ணி விட்டார்களாம்.

அந்தக் காலகட்டத்தில் தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்தால் தான் கலெக்ஷனைப் பார்க்க முடியும். அதனால் படத்தை வேக வேகமாக எடுத்து முடித்துவிட இதைக் கேள்விப்பட்ட இளையராஜா அதிர்ந்து விட்டாராம். நாம் போடாமலேயே நாம் ஏற்கனவே பண்ணிய இசையை எடுத்து அங்கங்கே ஒட்ட வைத்து படத்தை வெளியிட்டு விட்டார்களே என்று கோபம் வருகிறது. இனி பாலசந்தர் படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று முடிவெடுக்கிறார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூப் விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply