• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பாரிய அளவு வீழ்ச்சியடைந்த வீட்டு விலைகள்

கனடா

கனடாவில் வீடு வாங்குவதற்காக வட்டி வீதங்கள் குறைவடையும் என மக்கள் காத்திருப்பதனால் வீடுகள் விற்பனை குறைவடைந்துள்ளது என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதன்படி பிரிட்டிஷ், கொலம்பிய மாகாணத்தில் வீட்டு விற்பனைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 20 வீதத்தினால் வீட்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

கனேடிய மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் 6460 வீடுகள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 10 வீத வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கனேடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக பொருளியல் நிபுணர் பிரன்டன் ஒக்முன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.  
 

Leave a Reply