• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை பண்டிகைக்காலத்தில் பார்க்க முடிந்தது

இலங்கை

”வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை இந்த பண்டிகைக்காலத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”2019 ஆம் ஆண்டு 134 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் தற்போது 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் அப்போது 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பா அரிசி இன்று 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்று 95 ரூபாய்கும் அதிகவிலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

சீனி, பருப்பு, முட்டை ஆகியவற்றின் விலைகளும் இவ்வாறு அதிகரித்துள்ளன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதத்தை கோருகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் இன்று வரை அதனை தவிர்த்துவருகின்றனர்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply