• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயலலிதா கடைசி வரை பாதுகாத்து அந்த பரிசு ....

சினிமா

அம்மா நடிகை என்பதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் விருப்பமே இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் ஜெயலலிதா. ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான வெண்ணிற ஆடை என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், அவரின் அதிர்ஷ்டம் அடுத்த படமே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததாலும், அந்த படங்கள் ஹிட் அடித்ததாலும் எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அதனால் மற்ற நடிகர்களின் படங்களில் அவர் நடிக்கவில்லை. ஆனால், சில காரணங்களால் எம்.ஜி.ஆர் சரோஜாதேவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கினார்.

அதோடு, அரசியலிலும் பிஸி ஆகிவிட்டதால் ஜெயலலிதாவுடனான அவரின் உறவில் சுணக்கம் ஏற்பட்டது. இதில், கோபமடைந்த ஜெயலலிதா சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும், அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடம் கொடுத்தார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அவரை நியமித்தார். அதோடு, மேல் சபை எம்.பி பதவியும் அவருக்கு வாங்கி கொடுத்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகவும் மாறினார்.

அரசியல்வாதி ஆனபின்பு திரை உலகினரின் உறவை மொத்தமாக துண்டித்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால், சோ உள்ளிட்ட சிலரை மட்டும் அவ்வப்போது சந்தித்தார். இதில் நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஒருவர். வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து அறிமுகமானவர் இவர்.

அதோடு, ‘எதிர்காலத்தில் நீங்கள் அரசியலில் பெரிய இடத்துக்கு வருவீர்கள்’ என்று முதலில் ஜோசியம் சொன்னவரே அவர்தான். இதனால், வெண்ணிற ஆடை மூர்த்தி எப்போது அவரை பார்க்க விரும்பினாலும் அதை அனுமதித்தார் ஜெயலலிதா. ஒருமுறை தலைமை செயலகத்தில் அவரை மூர்த்தி சந்தித்தபோது ஒரு மரகத வினாயகர் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார்.

‘இதை என்ன செய்வது?’ என ஜெயலலிதா கேட்க ‘இதை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். இது அதிஷ்டம் தரும். இந்த தேர்தலில் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்’ என சொல்லிவிட்டு போனாராம் மூர்த்தி. அந்த பரிசை கடைசி வரை ஜெயலலிதா பாதுகாத்து வைத்திருந்தாராம்.
 

Leave a Reply