• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலமெல்லாம் சினிமாவில், அரசியலில் ஆலோசகராக  எம்ஜிஆரைக் காத்து நின்ற அவரின் இதயக்கனி !

சினிமா

பொது வாழ்வில் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக, மூளையாக இருந்து செயல்பட்டவர் 'ஆரெம்வீ' 
என்றழைக்கப்பட்ட திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். அறிஞர் அண்ணாவால் எம்ஜியாருக்கு கிடைத்த பொக்கிஷம் அவர். 
'நாடோடி மன்னன்' எம்ஜிஆரின் செல்வத்தையெல்லாம் விழுங்கி நின்றபோது, படம் வெளிவர வழி வகுத்து அவரை மன்னனாக்கியவர் ஆரெம்வீ. எம்ஜிஆர் பிக்சர்ஸின் நிர்வாக இயக்குநர் அவரே. 'அடிமைப்பெண்' மாற்றியமைக்கப்பட்ட கதையின் பின்புலத்தில் இருந்தவர் அவர். 
எம்ஜிஆர்,  திமுகவிலிருந்த போது தொடங்கப்பட்ட 'உலகம் சுற்றும் வாலிபன்' அதிமுக தொடங்கியபின்   திமுக அரசின் எதிர்ப்பால் பிரச்னைகளில் சிக்கிய நிலையில்,  திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது படம் வெளிவர வகை செய்து புகழுடன், பொருள், வெற்றியை குவிக்க  காரணமானவர் ஆரெம்வீ.

எம்ஜிஆரிடம் சம்பளம் பெற்று வந்தவர், எம்ஜிஆரைக் கொண்டு  படம் தயாரித்து அவருக்கே சம்பளம் தந்ததால் 'முதலாளி' என்று அழைக்கப்பட்ட மரியாதையும் பெற்றவர் ஆரெம்வீ.
தேசிய அளவில் சிறந்த நடிகராக, முதல் தமிழ் நடிகராக எம்ஜிஆர்  தேர்வு செய்யப்பட காரணம் ஆரெம்வீயின் 'ரிக்சாகாரன்'  
இப்படியாக அரசியலில், ஆட்சியில் எம்ஜிஆருக்கு  மந்திராலோசனை சொல்லும் இடத்திலும், அவரை உயர்த்திப்பிடித்தவராக கடைசிவரை நின்ற தளநாயகன் திரு ஆரெம்வீ, 
எம்ஜிஆரின் புகழ் காற்றோடு உலவும் தென்றல் காற்றாக இருப்பார். 
அவரது தோற்றம் மட்டுமே 9 (செப்டம்பர், ஏப்ரல் எதுவானாலும்) என்பது நம் நினைவில் இருக்கும். 
என் தாய் மறைந்தபோது நேரில்  வந்து முதல் அஞ்சலி செலுத்தியவர் அருளாளர் திரு ஆரெம்வீ என்பது என்றென்றும் என் நினைவில் இருக்கும்.

இதயக்கனி எஸ். விஜயன்
 

Leave a Reply