• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலுக்குச் செல்வதற்கான மனப்பான்மை அரசாங்கத்திடம் இல்லை - சாந்த பண்டார

இலங்கை

நாட்டை முற்னேற்றுவதையே அரசாங்கம் பிரதான நோக்கமாக கொண்டுள்ளதால் தற்போது தேர்தல் ஒன்றிற்கு செல்லவதற்கான மனப்பாங்கு அரசாங்கத்திடம் இல்லை என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர்.

ஆனால் இம்முறை ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவாற்கு கடைகளில் மக்கள் அணிதிரள்வதை காணமுடிகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் பலனாகவே இந்த மாற்றம் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியின் சரியான வழிக்காட்டலின் கீழ் கிடைத்த வெற்றியின் பலனை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர்.

புத்தாண்டுக் காலத்தில் உணவு பொருட்களின் விலை இரட்டிப்பாகி உள்ளதென பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மக்களுக்;கு இந்த உண்மை புரியும்.

எனவே நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பணப்புழக்கம் சீhராமல் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் டொலர்களுடன் வெளிநாட்டுக் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 பில்லியன் டொலர்களைக் கடந்துவிடும் என நம்புகிறோம். தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான மனப்பான்மை எங்களிடம் இல்லை.

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை தொடரவே விரும்புகிறோம். சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முகம்கொடுக்க தயாராக இருக்கிறோம்.

தற்போது பொருளாதாரத்தை பலப்படுத்துவது குறித்தே நாம் கவனம் செலுத்துகிறோம்” என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply