• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலையில் சிறுவனின் கொடுஞ்செயல் - பெற்றோருக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்

அமெரிக்காவில் மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் பெற்றோருக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் மரணமடைந்தனர். அமெரிக்காவில் முதல் முறையாக, மகன் செய்த குற்றத்திற்கு பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  
இந்த வழக்கு விசாரணை தொடர்பில் ஜெனிஃபர் மற்றும் ஜேம்ஸ் க்ரம்ப்ளே தம்பதி செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். க்ரம்ப்ளே தம்பதியின் சின்னதாய் ஒரு நடவடிக்கை இந்த பெருந்துயரத்தை தடுத்து நிறுத்தியிருக்கும் என்றே நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு தங்களின் மகன் திட்டமிட்டுவது தங்களுக்கு தெரியாது என்றே க்ரம்ப்ளே தம்பதி தெரிவித்துள்ளனர். ஆனால் தங்களின் துப்பாக்கியை பாதுகாக்க தவறிய காரணத்தாலையே, சிறுவன் ஈத்தன் அந்த துப்பாக்கியை கைப்பற்றி, படுகொலையை நடத்தியதாக சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

தற்போது 17 வயதாகும் ஈத்தன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். பாட்டியின் மரணம், ஒரே ஒரு நண்பரும் வேறு பகுதிக்கு குடியேறி சென்றதும் தம்மை கவலையில் ஆழ்த்தியதாக ஈத்தன் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளான்.

ஈத்தன் பயன்படுத்திய துப்பாக்கியானது சம்பவம் நடக்கும் 4 நாட்கள் முன்னர் தான் ஜேம்ஸ் க்ரம்ப்ளே வாங்கியிருந்தார். இந்த நிலையில், கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள், க்ரம்ப்ளே தம்பதிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரினர்.

அதே வேளை, க்ரம்ப்ளே தம்பதியை சிறையில் அடைப்பதால் இதுபோன்ற குற்றச்செயல்களை தடுத்துவிட முடியாது என அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்ததே, அவர்களுக்கு அளிக்கப்பட்ட போதுமான தண்டனையாக இருக்கும் என்றும் வாதிட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
 

Leave a Reply