• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்ன அபத்தமா பாட்டு எழுதியிருக்க? மூத்த கவிஞர் கடும் விமர்சனம் - வாலி கொடுத்த பதிலடி

சினிமா

இந்த கால கவிஞர்களுக்கு வெற்றிப்பாக்கு போட்டால் தான் பாடல் வரும்போலா என்று கேட்க, அதற்கு வாலி, அப்படியெல்லம் இல்லை. வெற்றிப்பாக்கும் போடவில்லை என்றாலும் பாடல் வரும் கூடவே வாசனையும் வரும் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படும் கவிஞர் வாலியின் பாடலை அவருக்கு முந்தைய தலைமுறை கவிஞரான உடுமலை நாராயணகவி கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த விமர்சனத்தை வாலி சாமார்த்தயமாக எதிர்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் உடுமலை நாராயணகவி. பிற்காலத்தில், கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் வருகையால் உடுமலை நாராயணகவிக்கு வாய்ப்பு சரியாக இல்லாமல் போய்விடுகிறது. அதேபோல் தனது காலத்தில் இருக்கும் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாத ஒரு ஆளுமை என்று சொல்லலாம்.

ஒருமுறை ஒரு பாடல் கம்போசிங்கின்போது கவிஞர் வாலியை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அப்போது வாலி வெற்றிப்பாக்கு போட்டுக்கொண்டே பேச, நாராணயகவி, இந்த கால கவிஞர்களுக்கு வெற்றிப்பாக்கு போட்டால் தான் பாடல் வரும்போலா என்று கேட்க, அதற்கு வாலி, அப்படியெல்லம் இல்லை. வெற்றிப்பாக்கும் போடவில்லை என்றாலும் பாடல் வரும் கூடவே வாசனையும் வரும் என்று கூறியுள்ளார்.

இதற்கு நாராணய கவி என்ன வாசனை என்ற கேட்க, நேற்று குடித்த மதுவின் வாசனை என்று வாலி சொல்ல, அட இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அதன்பிறகு சில ஆண்டுகள் போக, வாலி எங்க வீட்டு பிள்ளை படத்தை முடித்த தருணத்தில் ஒருநாள் உடுமலை நாராயண கவி வாலியை சந்தித்துள்ளார்.

எங்க வீட்டு பிள்ளை பாடல் கேட்டேன், நான் ஆணையிட்டால் ஓகே அது என்னையா நடந்துவிட்டால், எப்போமே ஆணையிடம் இடத்தில் இருப்பவன் தானே ஆணையிடுவான் அது எப்படி நடக்காமல் போகும் என்னயா இப்படி அபத்தமா பாட்டு எழுதியிருக்க என்று கேட்க, அதற்கு பதில் சொல்லாத வாலி, என்னணே உங்க பையன் ராமகிருஷ்ணன் என்ன பண்றான். என்று கேட்க, அவன் எங்க நம்ம பேச்சை கேட்கிறான் என்று உடுமலை நாராயண கவவி கூறியுள்ளார்.

நீங்கள் ராமகிருஷ்ணன் அப்பா தானே, நீங்க ஆணையிடம் இடத்தில் தானே இருகிறீர்கள். உங்கள் ஆணை ஏன் நடக்கவில்லை. உங்கள் ஆணை நடந்தால் தான் அதற்கு மதிப்பு என்று வாலி சொல்ல, சரிப்பா நீ சரியான பாட்டு தான் எழுதி இருக்க என்று தான் விமர்சித்த ஒரு பாடலை கடைசியில் நல்ல பாடல் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் உடுமுலை நாராயண கவி.
 

Leave a Reply