• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 7 நாட்களில் 39,798 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 07ஆம் திகதி வரை இந்த நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 675,582 ஆகும்.

இதில் ஏப்ரல் முதல் வாரத்தில் 7,831 இந்திய சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 4,892 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,087 பேரும், ஜெர்மனியில் இருந்து 2,712 பேரும் இந்நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply