• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் சஞ்சய் தத்?

சினிமா

கேஜிஎப் 2, லியோ போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருந்தவர் சஞ்சய் தத். மிரட்டல் வில்லனாக நடித்து இருந்த அவருக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைத்தது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், லியோ பட வில்லன் சஞ்சய் தத்தும் அரசியலில் களமிறங்க போகிறார் என செய்தி பரவியது.
  
இது பற்றி விளக்கம் கொடுத்து X தளத்தில் சஞ்சய் தத் பதிவிட்டு இருக்கிறார். "நான் அரசியலில் இணைவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த காட்சியிலும் இணையவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை."

"எதிர்காலத்தில் அரசியலில் நுழைய முடிவெடுத்தால் அதை நானே முதல் ஆளாக அறிவிப்பேன். இப்போதைக்கு என்னை பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம்" என சஞ்சய் தத் கூறி இருக்கிறார். 
 

Leave a Reply