• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையகத்திற்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பம்

இலங்கை

கொழும்பு – பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த விசேட சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில் ”இன்று எமது நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாகும்.

இலங்கையில் பிரித்தானியாவால் புகையிரத பாதை அமைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து பதுளைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்கள் நிறைவடைகின்றன.

 

அதனை கொண்டாடும் வகையில், எமது போக்குவரத்து அமைச்சும், புகையிரதை திணைக்களம் மற்றும் பதுளை சுற்றுலா அபிவித்தி அதிகார சபை ஆகியவை இணைந்து புதிய முத்திரையொன்றை வெளியிட்டுள்ளோம். மேலும் இன்று முதல் துன்கிந்த ஒடிசி என்ற அதிசொகுசு புகையிரதமொன்றை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மாலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இந்த புகையிரதம் பயணிக்கவுள்ளது. அதேபோன்று, எமது நாட்டின் மிகவும் அழகான இயற்கை வளத்தையும், சுற்றுலா துறையையும் கொண்டுள்ள கொண்டுள்ள பதுளைக்கு பயணிக்கும் பயணிகளுக்கு, தங்களின் பயண அனுபவத்தை மேலும் விஷேடமாக்க -கெளேக்ஷி சோ- என்ற புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களத்தினராலும், தேசிய பொறியியலாளர்களினாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புகையிரதம், திறந்த வெளியிலான காட்சிக்காண் புகையிரதமாகும் என்பது விசேட அம்சமாகும். இது பண்டாரவெலயிலிருந்து தெமோதர புகையிரத நிலையம் வரை சிறு தூரமான இரு மணித்தியாலங்களில் பயணிக்கும் வகையில், இன்று முதல் தினந்தோறும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதன்படி, நுற்றாண்டை கொண்டாடும் வகையில், சுற்றுலாத்துறைக்கு மூன்று பிரதான ரயில் சேவைகளான, எல்ல ஓடிசி, துன்கிந்த ஒடிசி மற்றும் கெளெக்ஷி சோ இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.

Leave a Reply