• Welcome to TamilsGuide
செய்திகள் 1

100 ஆண்டு நிறைவு - இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பம்

இலங்கை

கொழும்பு – பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கும் பதுளைக்கும் இடையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

அதன்படி, மலையகத்துக்கான புகையிரத சேவையை மேம்படுத்தும் வகையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ‘துன்கிந்த ஒடிசி’ என்ற விசேட புகையிரத சேவை பதுளை நோக்கி இன்று காலை 06 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இந்த விசேட புகையிரதம் வியாழக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதேபோல் தேசிய பொறியியலாளர்களினால் உருவாக்கப்பட்ட திறந்த வெளியிலான காட்சிக்காண் புகையிரதம் பண்டாரவெல- தெமோதர புகையிரத நிலையம் வரை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது.

மலையகத்துக்கான புகையிரத சேவையை விரிவுப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தியுள்ளதாக போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரச பஸ் சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் சேவையில் இருந்து நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 400 பஸ்களம், 50 அதிசொகுசு பஸ்களும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து திணைக்களம் 2022 ஆம் ஆண்டு 70.9 பில்லியனும், 2023 ஆம் ஆண்டு 76.9 பில்லியனும் இலாபமடைந்துள்ள நிலையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போக்குவரத்து சபையின் செலவு 146.2 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக அவர் என்றார்.
 

Leave a Reply