• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி

புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவர், பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ளதுடன், உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான Dmitry Medvedev என்பவர், பிரித்தானிய பெண்களை மீன் முகம் கொண்ட விரும்பத்தகாத பெண்கள் என விமர்சித்துள்ளார்.
  
இந்த Dmitry Medvedev, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவரும் ஆவார்.

மேலும், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் அவரது ராணுவத் தலைவரான Lt Gen Kyrylo Budanovவையும், வாய்ப்புக் கிடைக்கும்போது கொன்றுவிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையிலும், உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும்தான் அதற்கு பொறுப்பு என்று கூறிக்கொண்டிருக்கிறார் புடின்.

அவரைப் போலவே, மாஸ்கோ தாக்குதலின் பின்னால் இருப்பவர்கள், ஜெலன்ஸ்கி, Budanov போன்றவர்கள்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் கிடைத்தால், அவர்களை நீதிமன்றத்துக்கெல்லாம் கொண்டுவரக்கூடாது, அவர்களை கீவ்விலோ, அல்லது எங்காவதோ வைத்து கொன்றுவிடவேண்டும் என்றும் Dmitry Medvedevம் கூறியுள்ளார். 
 

Leave a Reply