• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் மானசீக குரு எம் நடிகர் திலகம் அவர்கள் - பி.எச். அப்துல் ஹமீது

சினிமா

அடுத்து வரும் தலைமுறைகள் நடிப்பதற்கென்று எந்த ஒரு பாத்திரத்தையும் விட்டு வைக்காது அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்து அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அந்தப் பாத்திரங்களின் மூலம், நடிக்க வரும் அத்தனை நடிகர்களுக்குமே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் அவர்.சிவாஜியைப் போல் தமிழை அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் உச்சரித்த நடிகர் இன்றுவரை இல்லை. இனியும் பிறக்கப் போவதில்லை என்றார் கவியரசர் கண்ணதாசன்.

தமது கொஞ்சு தமிழ்ப் பேச்சால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்களைக் கொள்ளை கொண்ட பாட்டுக்குப் பாட்டு பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் "  ஆனால் ஒரு பாமரனும் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் அவர். பள்ளி நாடகங்களில் நான் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை, வசன உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது." என்கிறார் .

'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது..

அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.

இந்த சிறியேனுக்கும், தமது இதயத்தில் நண்பன் என்ற பெரிய அந்தஸ்தை  கொடுத்து அழகு பார்த்த என் மானசீக குரு எம் நடிகர் திலகம் அவர்கள் .                 - பி.எச். அப்துல் ஹமீது

நடிகர்  திலகம் சிவாஜி கணேசன்  - அப்துல் ஹமீத்  @ENDRENDRUMSIVAJI  

https://www.youtube.com/c/ENDRENDRUMSIVAJI

Leave a Reply