• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போலி வைத்திய நிலையங்களைக் குறிவைக்கும் சுகாதார அமைச்சு

இலங்கை

நாட்டில் உள்ள போலி வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்களைக்  கட்டறிவதற்கான  துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

போலி வைத்தியர்கள் மற்றும் வைத்தியநிலையங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்தே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ”வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதும், தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்  நாடாளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தொடர்பில் உடன்விசாரணை மேற்கொள்ளுமாறு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்களுக்கு எதிராகக்  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply