• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர நடவடிக்கை

இலங்கை

கொரோனாப் பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சம்பிரதாய மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல விஞ்ஞான கருத்துக்களை நிராகரித்து இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply