• Welcome to TamilsGuide
செய்திகள் 1

20 ஆண்டுகள் வசித்ததால் பிரித்தானிய பிரஜையாக மாறும் பிரபல அமெரிக்க நடிகை

பிரபல அமெரிக்க நடிகை கில்லியன் ஆண்டர்சன் முழு பிரித்தானிய பிரஜையாக மாறலாம் என செய்தி வெளியாகியுள்ளது. 

1992ஆம் ஆண்டில் வெளியான The Turning ஹாலிவுட் படத்தில் அறிமுகமான நடிகை கில்லியன் ஆண்டர்சன்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். 

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த கில்லியன் ஆண்டர்சன் (Gillian Anderson), லண்டனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.

தற்போது 55 வயதாகும் கில்லியன், பிரித்தானிய குடியுரிமைக்கான விண்ணப்பங்களை செயலாக்கும் விசா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தது பொதுவெளியில் தெரிய வந்தது. 

லண்டன் நகரின் மார்க் லேனில் உள்ள அலுவலகம் குடியேற்ற ஆவணங்களை கையாளுகிறது. எனவே கில்லியன் தனது விசாவை புதுப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரது வருகைக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் வாய் திறக்கவில்லை. ஆனால் அவரோ பிரித்தானியா தனது வீடு என்று குறிப்பிடுகிறார்.

கில்லியன் ஆண்டர்சன் பிரித்தானியா குறித்து கூறுகையில், 'நான் ஒரு அமெரிக்கனை விட பிரித்தானியரைப் போல் உணர்கிறேனா என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு என்ன பதில் என்று எனக்கு தெரியவில்லை. லண்டனை எனது வீடு போல் நான் உணர்கிறேன், அது என் வீடு என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நகரமாக லண்டனை விரும்புகிறேன். அங்கு நான் மிகவும் வசதியாக உணர்கிறேன். அடையாளத்தைப் பொறுத்தவரை, நான் இன்னும் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.     
 

Leave a Reply