• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாவில் யாருக்கு எப்படி வாய்ப்பு வரும் என்பதை எப்படி கணிக்க முடியாதோ...

சினிமா

சினிமாவில் யாருக்கு எப்படி வாய்ப்பு வரும் என்பதை எப்படி கணிக்க முடியாதோ, அப்படி யாரால் வாய்ப்பு பறிபோகும் என்பதையும் சொல்ல முடியாது. ஒரு நடிகரிடம் நீதான் இந்த படத்தில் ஹீரோ என வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், படப்பிடிப்புக்கு போய் பார்த்தால் அங்கு வேறு நடிகர் நடித்துகொண்டிருப்பார்.

விஜயகாந்த் கூட இதுபோன்ற அனுபங்களை சந்தித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல இப்போது பெரிய நடிகர்களாக இருக்கும் பலரும் அந்த அவமானங்களை தாண்டி வந்து சாதித்து காட்டி இருக்கிறார்கள். சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது ஒரு படத்தில் நடிக்க நடிகர்களை தேடுகிறார்கள் என தெரிந்து அங்கு செல்வார்கள்.

இயக்குனர் அங்கு வரும் நபர்களை பார்ப்பார். சில காட்சிகளை சொல்லி நடிக்க சொல்வார். இயக்குனருக்கு திருப்தி எனில் அந்த நடிகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இல்லையேல், வாய்ப்பு கிடைக்காது. அதன்பின் வேறு கம்பெனி, வேறு இயக்குனர் என வாய்ப்பு தேட வேண்டும். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் கூட அப்படி வாய்ப்பு தேடியவர்களில் ஒருவர்தான்.

விஜய்ச் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு போனபோது ‘உனக்கெல்லாம் எதற்கு சினிமா?’ என திட்டி அனுப்பினார் மிஷ்கின். இப்போது அதே மிஷ்கின் இயக்கி வரும் ட்ரெய்ன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி பாரதிராஜாவால் நிராகரிக்கப்பட்டு பின்னாளில் பெரிய நடிகரான ஒருவரை பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பின் அடுத்தபடத்தில் புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முடிவெடுத்தார் பாரதிராஜா. சென்னை ஜி.என்.செட்டி சாலையில் இருந்த வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் நடிகர்கள் தேர்வு நடந்தது.

அதில் பலரும் கலந்து கொண்டனர். அதில் நடிகர் சிரஞ்சீவியும் ஒருவர். ஆனால், அவரை நிராகரித்தார் பாரதிராஜா. அவர் தேர்ந்தெடுத்தது சுதாகர் என்பவரை. அப்படி உருவான திரைப்படம்தான் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தில் ராதிகாவை அறிமுகம் செய்தார் பாரதிராஜா. பாரதிராஜாவில் நிராகரிக்கப்பட்ட சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் நுழைந்து மெகா ஸ்டாராக மாறினார் என்
 

Leave a Reply