• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூப்பர் ஸ்டாரையே வேண்டாம் என சொன்ன சம்பவம்

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் இன்று வேண்டும் என்றால் எல்லாராலும் விரும்பப்படும் நடிகராக இருக்கலாம். அவரை கோலிவுட்டினர் சூப்பர்ஸ்டார் என அழைக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவருக்கு சினிமாவில் நிறைய எதிர்ப்பு இருந்தது. முக்கிய படம் ஒன்றில் ரஜினியை வேண்டாம் என்றுக்கூட சொல்லிய சம்பவமும் நடந்ததாம்.

எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவல் முள்ளும் மலரும். இதை படித்தவுடனே பாலுமகேந்திராவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதற்கான திரைக்கதையையும் உருவாக்கி வைத்து இருந்தார். அந்த சமயத்தில், ஆனந்தி பிலிம்ஸ் பட அதிபர் வேணு செட்டியார் பாலுமகேந்திராவை சந்திக்க வந்தார்.

எனக்கு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை. எதுவும் கதை இருந்தா சொல் எனக் கேட்டாராம். உடனே பாலுமகேந்திரா, முள்ளும் மலரும் கதையை சொன்னாராம். வேணு செட்டியாருக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம். நீயே இயக்கு எனவும் கூறிவிடுகிறார். உடனே பாலுமகேந்திராவிடம் அண்ணன் கதாபத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் எனக் கேட்க உடனே ரஜினிகாந்த் எனக் கூறிவிட்டாராம்.

ஆனால் வேணு செட்டியார், என்ன விளையாடுறீயா? வில்லனா நடிக்கிற ஒரு நடிகரை நடிக்க வைக்கிறதா? அதுவும் கருப்பா இருக்க ஆளு வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். ஆனால் பாலுமகேந்திரா அந்த காளி கேரக்டருக்கு ரஜினி தான் நடிக்க வேண்டும். இன்னொரு நடிகரை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை எனக் கூறிவிட்டாராம்.

உடனே தயாரிப்பாளர், என்ன உன் நண்பன்கிறதால அடம் பிடிக்கிறாயா எனக் கேட்டாராம். ஏனெனில் அந்த சமயத்தில், ரஜினிகாந்தும், பாலுமகேந்திராவும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் ரஜினியின் நடிப்பை பார்த்த பாலுமகேந்திரா உண்மையாக அவருக்கு திறமை இருப்பதாலே நடிக்க வைக்க கேட்டாராம். கடைசியில் ஒரு இயக்குனருக்கு இஷ்டத்துக்கு செயல்பட முடியாத சுதந்திரத்தினை நீங்க பறிக்கிறீங்க.

இனி நான் இயக்கவே இல்லை என்று தயாரிப்பாளரிடம் சண்டைக்கு வந்துவிட்டாராம். அதை தொடர்ந்தே தயாரிப்பாளர் ரஜினியை நடிக்க வைக்க ஓகே செய்தாராம். பின்னர் இருவரும் சென்று ரஜினியிடம் பாலுமகேந்திரா டைரக்டர் ஆகும் விஷயத்தினை சொல்ல அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். அதை தொடர்ந்து, பாலுமகேந்திரா நீ தான் ஹீரோ எனக் கூறியதும் சந்தோஷத்தில் அதிர்ந்தே விட்டாராம். இப்படித்தான் உருவானது முள்ளும் மலரும் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
 

Leave a Reply