• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்குச் சாதகமாக அமையுமா எட்கா ஒப்பந்தம்

இலங்கை

இந்திய பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன் எட்கா ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில் “வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போது எவ்விதமான முறையான வழிமுறைகளும் தற்போது பின்பற்றப்படுவதில்லை.ஆகவே எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்”  எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply