• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் உரும்பிராயில் வாகன விபத்து! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

யாழ் – உரும்பிராய் பகுதியில்  முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று(18) உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்துக்கொண்டிருந்தவர் பின்னால்  பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply