• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொன்றியல் வாழ் அனைத்து அன்புத் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.

கனடா

எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை.மார்ஸல் லாரினில் அமைந்துள்ள கணேசா மண்டபத்தில் பெண்களுக்கான MTL WOMEN'S EXPO 2024 தொழில் வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது.
குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், வண்ணம் தீட்டுதல், பலூனிலேயே பலதரப்பட்ட படிவங்களை செய்து தரக்கூடிய கோமாளி  என பல்வேறு நிகழ்வுகளுடன்  பல்வேறு தொழில் செய்பவர்கள் தங்களது அனுபவங்களையும் தொழில் யுத்திகளையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள.
 15-க்கும் மேற்பட்ட வர்த்தக சாவடிகள்.அனைத்துமே பெண்களால் நடத்தப்பட இருக்கிறது .ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம்.
தங்களுக்காக சுடச்சுட பலதரப்பட்ட சுவையான உணவு வகைகள் கொண்ட சாவடிகள்
அழகான தரமான உடுப்பு கடைகள்,
அழகுக்கு அழகு நகை கடைகள்,
உங்களுடைய காப்பீட்டு உறுதி சேவைகள் 
ஊடக சேவைகள் ,

உங்களது தொழிலை தொடங்குவதற்காக உதவும் பல்வேறு தரப்பட்ட தன்னார்வ தொண்டு  நிறுவனங்களும்  கண்காட்சி வைக்க உள்ளனர்.
அனைவரும் வருக! ஆதரவு தருக! பயன்பெற்று செல்க!
முதலில் வரும் 100 பேருக்கு அழகிய பைகள் வழங்கப்படும் மிகவும் வித்தியாசமான முறையில் சர்வதேச பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பெண் தொழில் புரிபவர்களால் நடத்தப்படும் வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை 

அனைவரும் வருக ஆதரவு தருக
 

Leave a Reply