• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிறந்தநாள் விருந்து - தங்க நிற உடையில் ஜொலித்த ஆலியா

சினிமா

பிரபல இந்தி நடிகை ஆலியா பட், கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்டு ஆப் த இயர் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் மூலம் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையானார். இந்நிலையில் 'ஆலியா பட்' தனது 31-வது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஒரு பிரபல சொகுசு ஹோட்டலில் கொண்டாடினார். பிறந்தநாளை யொட்டி மிக முக்கிய பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் பலருக்கு இரவு விருந்து அளித்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஆலியா பட் தங்க நிறத்திலானான பளபளப்பான அசத்தல் உடையில் வந்தார்.அப்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட் விருந்து நிகழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆலியா பட்டின் சகோதரியான ஷாஹீன், ரன்பீர் கபூரை அன்பாக கட்டியணைத்து நெற்றியில் மென்மையான முத்தம் கொடுத்தார். இந்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மேலும் பிறந்த நாள் விருந்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கபூர் தனது மைத்துனி ஷாஹீன் பட்டை அன்புடன் கட்டியணைத்து முத்தம் கொடுத்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல வித விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இரவு விருந்தில் ஆலியா பட்டின் தாய் சோனி ரஸ்தான், ரன்பீர் கபூரின் அம்மாவும், ஆலியாவின் மாமியாருமான நீது கபூர், இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல், இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷ்லோகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலியா பட் பல ஆண்டுகளாக அம்பானி குடும்பத்துடன் மிக நெருக்கமானவர். எனவே, பிறந்தநாள் விருந்தில் அம்பானி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply