• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

இலங்கை

நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்கக்கூடிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கி, துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த நிபுணர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்குள் அனைத்து துறைகளிலும் உள்ள கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கி ஊக்கமளிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் தடைப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது, முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், நிர்மாணச் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply