• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகில் மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா?

மனிதர்களில் ஒரு சிலருக்கு இயற்கையாகவே விலை உயர்ந்த பிராண்டட் பொருட்களை பயன்படுத்த அதிகம் விரும்புவார்கள்.

நாம் பயன்படுத்தும் வீடு கார் உடை என எல்லா பொருட்களும் விலையுயர்ந்த பொருட்ளாக தான் இருக்கும். அந்த வகையில் நமக்கு மிகவும் அத்தியாவசியமானது ஆடையாகும்.

அப்படி பார்க்கப்போனால் உலகில் எந்த துணி மிகவும் விலையுயர்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவைகளில் மிகவும் முக்கியமான தேவை நாம் அணியும் உடை தான். அந்த வகையில் உலகில் மிகவும் விலையுயர்ந்த துணியாக கருதப்படுவது விக்குனா துணியாகும்.

இது குளிர் காலத்திற்கு ஏற்றதாக உள்ளது. இந்த விக்குனா துணி பல நூற்றாண்டுகளாக ராயல்டி மற்றும் செல்வந்தர்களின் ஆடைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இந்த துணி ஆன்டி மலையில் காணப்டும் ஒட்டகமான விக்குனா எனும் மிருகத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அவற்றின் ரோமங்கள் மிகவும் இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.

இந்த தோலில் இருந்து நெய்யப்படும் ஆடைகள் தான் விக்குனா ஆடைகள். 1960 இல் இந்த ஆடை கம்பளி ஆடை என  அறிவிக்கப்பட்டன.

இந்த மிருகம் உலகில் இருக்கும் ஆபத்தான மிருகங்களில் ஒன்றாகும். ஒரு மனிதனின் கோட் செய்வதென்றால் ஒரு 35 விக்குனாக்களின் தோலை நாம் அகற்றி வேறாக்கி எடுக்க வெண்டும்.

இதனால் இத்தாலியில் 5,000 ஏக்கரில் விக்குனாக்களுக்கான சரணாலயம் உருவாக்கப்பட்டள்ளது.

லோரோ பியானா நிறுவனம் தனது இணையத்தளத்தில் இந்த விக்குனாவால் செய்யப்பட்ட ஒரு ஜோடி காலுறைகளை சுமார் ரூ.80,000க்கும், ஒரு சட்டை ரூ.4.23 லட்சம் க்கும் விற்பனை செய்கிறது.

அதனால்தான் விக்குனா ஆடை உலகின் மிக விலையுயர்ந்த துணியாக கருதப்படுகிறது.                   
 

Leave a Reply