• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமலால் காணாமல் போன இரண்டு பெரும் முதலாளிகள்

சினிமா

கமலைப் பொறுத்தவரை சினிமா பணம் சம்பாதிக்கிற ஒரு மிஷினாகவும் அல்லது பொழுது போக்காகவும் மட்டும் பார்வையிடக் கூடியவர் அல்ல. ஒவ்வொரு புதுமையான விஷயங்களை செலுத்தியவர். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத இலக்கணத்தை உடைத்தவர் தான் உலக நாயகன். அந்த வகையில் இந்திய சினிமாவில் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கலைஞன்.
  
கிட்டதட்ட 50 வருஷ அனுபவத்தை வைத்து தொடர்ந்து பயணித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பு தத்ரூபமாகவும், தேர்ந்தெடுக்க படங்கள் சாதனை படமாகவும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட இவரை வைத்து படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் தயக்கம் காட்டுவார்கள்.

ஏனென்றால் இப்படிப்பட்ட சினிமா ஞானமுள்ள ஒருவரை வைத்து படம் எடுக்கும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் பின்வாங்கியும் இருக்கிறார்கள். ஆனால் இப்படி இவரைப் பற்றி பல விஷயங்களை புகழ்ந்து பேசினாலும் சில உண்மைகளை சொல்லியாக வேண்டும். உண்மை என்றால் அது கசக்க தான் செய்யும். ஆனால் அதுதான் எதார்த்தம்.

கமல் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக பல படங்கள் தோல்வியடைந்து இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தாலே தயாரிப்பாளர்கள் கமலை ஒதுக்கி வந்தார்கள். அப்படி கமலை வைத்து சில தயாரிப்பாளர்கள், தயாரிக்க முன் வந்த நிலையில் நஷ்டப்பட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமலேயே காணாமல் போய்விட்டார்கள்.

அந்த வகையில் கமலின் 50 வருஷம் அனுபவத்தையே சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு அந்த இரண்டு படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதாவது சுந்தர் சி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த அன்பே சிவம் படம் வந்தது.

வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட ஒரு அற்புதமான படத்தை பார்க்கவே ரொம்பவே புல்லரிப்பாக இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள்.

ஆனால் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் அதை எப்பொழுதுமே சரி செய்ய முடியாத அளவிற்கு இப்படத்தை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் பெரும் நஷ்டத்தை பார்த்திருக்கிறார். அதே மாதிரி ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் எழுதி நடித்த திரைப்படம் உத்தம வில்லன்.

இப்படமும் வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இதனால் இப்படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு அதிக அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இதனாலேயே இடைப்பட்ட காலத்தில் கமல் கொஞ்சம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். அதன் பிறகு லோகேஷ் கூட்டணியில் விக்ரம் படத்தில் ஜாக்பாட் அடித்தது. இதனால் தயாரிப்பிலும் நடிப்பிலும் பெயர் வாங்கிய கமல், இனி இதுதான் என்னுடைய ட்ரிக்ஸ் என்பதற்கு ஏற்ப லாபத்தை ஈட்டும் வகையில் படங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டார். 
 

Leave a Reply