• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?

சினிமா

தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் ஏதாவது ஒரு காட்சியையோ அல்லது அவரின் மேனரிசத்தையோ அல்லது அவரது வசனம் ஏதாவது ஒன்றையோ தங்களது படங்களில் ஒரு சிறு பகுதியிலாவது பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். திரைத்துறையில் செய்த பங்களிப்பு மிக மிக அதிகம்.

மேலும் சண்டையாகட்டும், நடனமாகட்டும் எம்.ஜி.ஆரின் சாயலைப் பின்பற்றி நடிக்காத நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இப்படி தன்னை அணுஅணுவாக ரசிக்கும் அளவிற்க மக்களின் மனங்களிலும், திரைப்படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தார் எம்.ஜி.ஆர்.

தான் நடிக்கும் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக உழைப்பைக் கொட்டி நடிகர்கள் இயக்குநர்களின் எதிர்பார்ப்பையும், ரசிகனின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நடிக்கும் நடிகர்களைப் போல எம்.ஜி.ஆர்., ஒரு பாடல் காட்சிக்காக கிட்டத்தட்ட ஒருமாத காலம் நடனப் பயிற்சி எடுத்திருக்கிறார்.

1968-ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயலட்சுமி நடிப்பில் கே.சங்கர் இயக்கிய படம் தான் குடியிருந்த கோயில். 8 பாடல்கள் கொண்ட இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். வாலி, கண்ணதாசன், புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு குத்து பாடல்தான் ஆடலுடன் பாடலைக் கேட்டேன்.. என்ற பாடல்.

இன்றும் இந்தப் பாடலைக் கேட்டால் எழுந்து ஆடத் தோன்றும் அளவிற்கு அந்தக் காலத்தின் துள்ளலிசைப் பாடலாக இருக்கிறது. இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயலட்சுமியின் நடனம் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும்.

நடனம் என்றாலே அதில் வெளுத்துக் கட்டும் நடிகை விஜயட்சுமியின் அளவிற்கு தானும் இப்பாடலில் ஆட வேண்டும் என உறுதி எடுத்த எம்.ஜி.ஆர். இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட ஒருமாத காலம் பயிற்சி எடுத்துள்ளார். பின்னர் இந்தப் பாடல் பதிவில் விஜயலட்சுமிக்கு நிகராக தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார் எம்.ஜி.ஆர்.

இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தால் எம்.ஜி.ஆர் எவ்வளவு சிரமப்பட்டு ஆடுகிறார் என்பது புரியும். வெறும் கைகளிலேயே நடன அசைவுகளைக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். இந்தப் பாடலில் நடனத்தில் புதுப் போக்கைக் கடைப்பிடித்திருப்பார். மேலும் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட சிரத்தையைப் பார்த்து விஜயலட்சுமி மெய்மறந்து கைகூப்பி வணங்கினாராம்.
 

Leave a Reply