• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரு பிலேத்திரன் அன்ரனி தேவராஜ் அவர்கள்  ஸ்ரீ விக்ரம கீர்த்தி விருதினை பெற்று மண்ணிற்கு பெருமை

இலங்கை

நெடுந்தீவை சேர்ந்த கலைஞர் திரு பிலேத்திரன் அன்ரனி தேவராஜ்  அவர்கள் இலங்கை இந்திய நட்புறவு அமையத்தினால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இசைத்தேர்வில் உயரிய விருதாக கெளரவமளிக்கப்படும் 

ஸ்ரீ விக்ரம கீர்த்தி விருதினை பெற்று மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேற்படி நிகழ்வானது கடந்த 10.03.2024 அன்று கண்டி கெப்படிப்பொல மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இசைத்துறையில் தனது சிறுபராயம் முதலாக பயணித்த இவர் பல தொலைகாட்சி நிகழ்வுகளிலும்  இறுவெட்டுக்களிலும் இசை நிகழ்வுகளிலும் காத்திரமான வகிபங்கை கொண்டிருந்தார்.

கொழும்பு திருமறை கலாமன்றத்தின் நிரந்தர அங்கத்தவராக  மன்றத்தின்  ஆற்றுகைகளுக்கு தனது குரல் வடிவத்தால் மெருகூட்டியும் குறிப்பாக கொழும்பு திருமறை கலாமன்றத்தின் பாஸ்க்குகால ஆற்றுகையான இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு திருக்காட்சியின் பாடல்களை  பக்திபூர்வமாக. உணர்வுபூர்வாமாக பாடி பாராட்டுக்களையும்  கத்தோலிக்க கலை இலக்கியங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கிய கலைஞருமாவார்.

மேலும் யாழ் மாவட்டசெயலகம்  மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலகம் அகியவற்றின் உயரிய கலைஞர் விருதுகளை பெற்ற சமூக செயற்பாட்டாளராகிய இவர் இலங்கை இந்திய நட்புறவு அமையம் நடாத்திய தேர்வினூடாக அங்கிகாரம் பெற்று இவ்வுயரிய விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply