• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம்பெண்ணின் வாழ்வை நாசமாக்கிய வெளிநாட்டவருக்கு ஜேர்மனியில் தண்டனை அறிவிப்பு

இலங்கை

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த தன் சக நாட்டுப் பெண் ஒருவரை வன்புணர்ந்து கொலை செய்த அமெரிக்கர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க இளம்பெண்களான ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் ஆகியோர், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

இளம்பெண்ணின் வாழ்வை நாசமாக்கிய வெளிநாட்டவருக்கு ஜேர்மனியில் தண்டனை அறிவிப்பு | German Sentence For Foreigner Ruined Woman Life

Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.

அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Philipp Bohling, 31) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி ஈவா மற்றும் கெல்சியை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும், ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் ட்ராய். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத ட்ராய், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார்.

ட்ராய் மீது ஜேர்மனியில், கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ட்ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

வழக்கமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுவோருக்கு ஜேர்மனியில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜாமீன் வழங்கப்படும் நிலையில், ட்ராயின் குற்றம் படுபயங்கரமானது என்பதால், அவருக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னும் ஜாமீன் வழங்கப்பட வாய்ப்பில்லை என நீதிபதியாகிய Christoph Schwiebacher என்பவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply