• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டி

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாப்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு 72 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார். இதை கவனிக்காமல் அந்த மூதாட்டி ஷட்டரை ஒட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடை மின்சார ஷட்டரில் சிக்கிக்கொண்டது.

இதனால் ஷட்டர் மேலே திறந்த போது, ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார். இதை அங்கு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டியை மீட்டு பத்திரமாக தரையில் இறக்கி விட்டார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 12 வினாடிகள் கொண்ட அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

Leave a Reply