• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா...

சினிமா

இசைஞானியின் இசையில் பெண்களை உத்வேகப்படுத்தி சிறப்பித்து பெருமைப்படுத்தும் பல பாடல்கள் வந்திருந்தாலும் அனைவராலும் பெரிதும் விரும்பப் பட்டவையாக சில ஆகச் சிறந்த முத்துக்களே எங்கும் கேட்கும் பாடலானது.
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா...
மனதில் உறுதி வேண்டும் வாழ்க்கையிலே தெளிவும்...
ஓ... ஒரு தென்றல் புயலாகி வருமே... 
ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பறை சாற்றுவது போல சில பாடல்கள் இருக்கும். அதில் குறிப்பிட்டு கூறுவதாக இந்த பாடல்கள் அமைந்திருக்கும்.
மொத்து மொத்துனு மொத்தனும் மொத்தனும் குத்து...
வீட்டை தாண்டி நீ வெளியே வந்ததும் ரூட்டை நீ...
அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி... 
பெண்ணானவள் தன்னுள் அவளின் அழகை இயற்கையோடு ஒப்பிட்டும் தாய்மையை பேணி பாராட்டி இன்பமாக பாடுவது போல சில பாடல்கள் அமைந்திருக்கும்.
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை..
அழகிய கண்ணே உறவுகள் நீயே... 
தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம்... 
பெண் தன்னால் கொண்ட மன தைரியத்தின் மகோத்துவத்தை எதிரொலிப்பதாக சில பாடல்கள் அமைந்திருக்கும்..
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ...
ஓஹோஹோ... காலைக்குயில்களே கவிதை...

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்...
ஆணுக்கு தாயாக தோழியாக மனைவியாக மகளாக சகோதரியாக இப்படி பல விதமான பாத்திரங்களாகி பயணப்பட்டாலும் “பூ மாலை ஓர் தோளில் தான் போட நினைப்பாள் பெண். போட்டாலும் பூ மாலை போல் பொருளும் இல்லையே... இது நியாயமா...” என விக்கித்து வேதனைப்படும் சூழலை நல்லதோர் வீணை செய்தே போன்ற பாடல்களில் இசைஞானியின் இசை பிரதிபலிக்காமல் இருந்ததில்லை... 
இவ்வளவு சிறப்புகளுடன் இசைஞானியின் பாடல்கள் பெண்மையை போற்றுவதாக அமையப் பெற்றிருந்தாலும் ஆண்கள் அனைவரும் அப்பிரசண்டிகளாகி பெரிதும் அனுபவித்து ஆத்ம திருப்தியுடன் ஆராதிக்கும் பாடல்களாக இசைஞானியின் குரலில் அவருடைய வரிகளுடன் மற்றும் அவரின் இசையில் வந்த இந்த பாடல்கள் தான் என்றால் அது மிகையாகாது... 
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்... 
அது பொம்பளைக்கும் தெரியும்... 
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்... 
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்ட பாதகியா... 
ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு.. 
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்... 

Leave a Reply