• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..

சினிமா

இன்று தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்தின் தனது முதல் பட அனுவத்தினை பழைய பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ள செய்திதான் இது.  முதன் முதலாக கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க சிவாஜிராவ்-க்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவரைத் தேர்வு செய்த பாலச்சந்தர் மறுநாள் காலை 5 மணிக்கு உன் வீட்டு வாசலில் கார் வரும் அதில் வந்து விடு என்று கூறியிருக்கிறார்.

தான் முதன்முதலாகச் சினிமாவில் நடிக்கப் போவதை எண்ணி கனவு கண்டுகொண்டே அன்றைய இரவினைக் கழித்திருக்கிறார் சிவாஜி ராவ். மறுநாள் காலை 4 மணிக்கெல்லாம் எழுப்பிவிடுமாறு தன் நண்பரிடம் கூறியிருக்கிறார்.  சொன்னது போலவே 4 மணிக்கெல்லாம் எழுந்து  5 மணிக்கெல்லாம் தயாராகி காருக்காக காத்திந்தார் சிவாஜி ராவ்.

ஆனால் கார்சொன்ன படி வரவில்லை. மனது படபடவென்று அடித்துக் கொள்ள 6 மணிவாக்கி கார் வரவே அவருக்கு உயிரே வந்திருக்கிறது. நேராக பாலச்சந்தரை பார்த்து ஆசி பெற்று அபூர்வ ராகங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றிருக்கிறார் ரஜினி.

அப்போது அங்கு கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, நாகேஷ் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருக்க சிவாஜிராவுக்கு ஒரே படபடப்பு. பின்னர் திரைக்கதை எழுத்தாளர் அனந்து அவரை ஆசுவாசப் படுத்தியிருக்கிறார். சிவாஜிராவுக்கு மேக்கப் போடப்படுகிறது.

தன்னுடைய முதல் காட்சியில் நடிக்க ஆயத்தமாகிறார். பைரவி இருக்காங்களா? என்ற தன்னுடைய முதல் வசனத்தைப் பேச வேண்டும். இதை மனதிற்குள்ளேயே பலமுறை சொல்லிப் பார்த்துக் கொள்கிறார்.

பின்னர் கே.பாலச்சந்தர் ரஜினி கேட்டைத் திறந்து வரும் காட்சியை லோ ஆங்கிளில் இருந்து காட்ட அதுதான் சினிமா உலகில் தான் எடுத்து வைக்கும் முதல் படியாக அந்த கேட்டைத்  திறந்திருக்கிறார் ரஜினி.

பின்னர் பல டேக்குகள் வாங்கியவரைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்த நாகேஷ் ரஜினியை அழைத்து பாலச்சந்தர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்தால் போதும் மிகைப்படுத்த நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நாகேஷின் ஆலோசனையை ஏற்று அடுத்த டேக்கிலேயே ரஜினி ஓகே வாங்க பின்னர் டப்பிங்கில் முதன் முறையாக தன்னுடைய நடிப்பினை ஸ்கீரில் பார்த்து பெருமைப்பட்டிருக்கிறார்.

படமும் வெளியாகி ஹிட் ஆனது. படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த பாலச்சந்தர் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று வாயாரா வாழ்த்தி சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களிலும்  நடிக்க வைத்து ரஜினியை சினிமா உலகம் அறியச் செய்ய அதன்பின் தன் திறமையால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் ரஜினிகாந்த்.
 

Leave a Reply