• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் - இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்

இலங்கை

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி நேற்றைய தினம்  புறப்பட்ட 5 ஆம் இலக்க பொடிமெனிக்கே ரெயிலில்  பயணித்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது நாவலப்பிட்டி ரெயில்  நிலையத்தில் வைத்துத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொது கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்ததாகக் கூறப்படும் சுற்றுலாபயணிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருர்து வருகைதந்த குறித்த புகையிரதத்தில் எல்ல பிரதேசத்துக்கு செல்வதற்காக பேராதனையில் முதலாம் வகுப்பில் குறித்த சுற்றுலாப் பயணித்திருந்தனர். இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனையில் குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது புகையிரத கட்டுப்பாட்டாளர் குறித்த சுற்றுலாப் பயணிகளை புகையிரதத்தை விட்டு இறங்குமாறு பணித்துள்ளார்.அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுது்து  நாவலப்பிட்டிப் புகையிரத நிலைய நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊழியர்கள் குழு ஒன்று புகையிரதத்துக்குள்ளிருந்த சுற்றுலாப் பயணிகளை அடித்து கீழே இறக்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply