• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒதுங்கி போனாலும் விடாமல் துரத்தும் அரசியல்

சினிமா

அஜித் எப்போதுமே தனித்துவமான மனிதர் தான். தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு அதன்படி தான் நடப்பார். சினிமாவை பொறுத்தவரையில் பேட்டி கொடுக்க மாட்டேன் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்பது போன்ற சில கொள்கைகளை அவர் வைத்திருக்கிறார்.
  
அதேபோன்று அரசியலிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. அவ்வளவு ஏன் அது போன்ற படத்தில் நடிப்பதையோ வசனம் பேசுவதையோ கூட அவர் விரும்ப மாட்டார். ஆனால் தற்போது ஜீனியஸ் இயக்குனர் ஒருவர் அவருக்காக அரசியல் கதை ஒன்றை தயார் செய்ய போகிறேன் என்று சொல்லி இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் அஜித்துடன் இணைய முடியாததை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் மூன்று முறை அஜித்துடன் படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் எப்படியும் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணி விடுவேன்.

அஜித் பழகுவதற்கு ரொம்பவும் இனிமையான மனிதர். அவருக்காகவே அரசியல் களம் கொண்ட ஒரு கதையை நான் தயார் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் தனக்கென ஒரு ட்ரெண்டை அமைத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த செல்வராகவனுக்கு கடந்த சில படங்கள் சரியாக போகவில்லை.

அதனாலேயே அவர் நடிப்பு பக்கம் திரும்பினார் தற்போது மீண்டும் 7g ரெயின்போ காலனி 2 புதுப்பேட்டை 2 மூலம் தன் இடத்தை பிடிக்க இருக்கிறார். இதில் அஜித்துடனும் கூட்டணி என்றால் நிச்சயம் வேற லெவலில் இருக்கும்.

தற்போது விஜய் அரசியலுக்கு சென்றுள்ள சூழலில் அஜித் அதிலிருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் செல்வராகவன் அவருடைய கொள்கையை உடைத்து தரமான கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply