• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் பாலே சிக்சர் அடிப்பது போல....

சினிமா

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. ,முதல் பாலே சிக்சர் அடிப்பது போல அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் பல படங்களுக்கும் இசையமைத்தார். அவரின் இசையில் உருவாகும் அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க இளையராஜா முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.

அவரின் இசையை நம்பியே பல திரைப்படங்களும் உருவானது. ஒருகட்டத்தில் இளையராஜாவை தமிழ் சினிமாவை காப்பாற்றும் கடவுளாகவே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பார்த்தனர். அவர் மட்டும் இசையமைக்க சம்மதித்துவிட்டால் படம் ஹிட் என பல அறிமுக இயக்குனர்களும் நினைத்தார்கள். 

அதனால் பலரும் அவரின் காலில் விழுந்தார்கள். அவரின் ஆசிர்வாதம் யாருக்கு கிடைக்கிறதோ அவரின் படத்தில் ராஜா இசையமைப்பார் என்கிற நிலை 80களில் இருந்தது. இதனால், இளையராஜா தன்னை உண்மையாகவே ராஜாவாக பாவித்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோரிடமும் கோபப்பட்டார். நான் சொல்வதுதான் சரி என்றார். உனக்கு இசையமைக்க முடியாது என பெரிய இயக்குனர்களிடம் சண்டை போட்டார். அதனால்தான் பாலச்சந்தர், மணிரத்னம், ரஜினி போன்றவர்கள் அவரை விட்டு புதிய இசையமைப்பாளர் பக்கம் போனார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரின் வருகைக்கு பின் இளையராஜா இசையமைக்கும் படங்கள் குறைந்து போனது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அவரின் தம்பி கங்கை அமரன் ‘என்னய்யா முட்டாள்தனமா பேசுறீங்க என என்னிடம் கோபப்பட்டால் நான் அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், அவரிடம் அப்படி சொல்ல முடியாது. அவரை சுற்றி அவரே ஒரு வட்டம் போட்டு வைத்துக்கொண்டு ‘நான் இப்படித்தான் இருப்பேன். அவன் என் காலில் விழ வேண்டும். தினமும் விழுவான் இன்னைக்கு ஏன் விழல’ என யோசிக்கும் நபர் அவர்.

உறவினர்கள் யாருடனும் அவருக்கு நெருக்கம் இல்லை. அவருடன் யாரும் இல்லை. அதுதான் எனது வருத்தம். நான் இப்போது வரை எந்த குறையும் இல்லாமல் முன்பு எப்படி வாழ்ந்தோனே அப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், அவர் அப்படி இல்லை. பெற்ற பிள்ளைகளிடம் கூட அவர் பேசுவது இல்லை. இதிலும் இல்லாமல் அதிலும் இல்லாமல் அதற்கு அவர் சன்னியாசம் போய்விடலாம். எங்களாலும் பெருமையாக சொல்ல முடியவில்லை’ என பேசியிருந்தார்.
 

Leave a Reply