• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலம் மாடர்ன் தியேட்டர்...

சினிமா

Kollywood Company: தமிழ் சினிமாவில் முன்னாடியும் தற்பொழுதும் எத்தனையோ புரோடக்‌ஷன் கம்பெனிகள் இருக்கின்றன. ஆனால், கடன் வாங்கி படமெடுக்காத ஒரே கம்பெனி ஒன்று இருக்கிறதாம். அந்த கம்பெனி குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோலிவுட் சினிமாவில் ஒரு புரோடக்‌ஷன் கம்பெனிகள் பைனான்சியர்களிடம் இருந்து கடன் வாங்கி தான் படங்களில் முதலீடு செய்வார்கள். அதை லாபம் வந்ததும் திருப்பி கொடுத்து விடுவார்கள். ஆனால் இது பின்னாட்களில் பிரச்னையை ஏற்படுத்திய நிகழ்வையும் பார்க்க முடிகிறது. 

இந்த வழியால் தான் கோலிவுட்டுக்குள் நிறைய பைனான்ஸ் கம்பெனிகள் புழக்கத்தில் உள்ளனர். ஆனால் ஒரு கம்பெனி வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து இங்க உள்ள கலைஞர்களுக்கு டிரெயினிங் கொடுத்து பின்னாட்களில் பெரிய அளவுக்கு அவங்க பிரகாசிக்க வைத்த வரலாறு கொண்ட ஒரு நிறுவனம்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியரா கவிஞர் கண்ணதாசனும் மாதச் சம்பளத்துக்கு இங்கே வேலை பார்த்தவர்கள். தமிழில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களை எடுத்தது இந்த கம்பெனி. தெலுங்கு, மலையாளம், இந்தி மட்டுமில்லாம சிங்களம், ஆங்கிலத்துலயும் படங்களைத் தயாரித்து உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கடனே இல்லாமல் அவர்கள் சுய லாபத்தினை வைத்தே படம் தயாரித்து வந்த கம்பெனி தான் டி.ஆர்.சுந்தரத்தின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். எம்.ஜி.ஆர் முதன்முதலில் கத்திச் சண்டை போட்டு நடித்த மந்திரக்குமாரி படத்தைத் தயாரித்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான்.

இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான் ராதாரவி, அஞ்சலி தேவி, ரங்காராவ் உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்கள். முதல் மலையாளப் படத்தை தயாரித்த நிறுவனம் இதுதான். இன்றும் சில படக்குழு சேலம் மாடர்ன் தியேட்டரின் மிஞ்சி இருக்கும் நுழைவு வாயிலில் முதல் காட்சியை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply