• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்ல – ஹல்பே பகுதியில் தீ விபத்து-ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக பாதிப்பு

இலங்கை

எல்ல – ஹல்பே தேயிலை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்

இதேவேளை தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையுடன் தீ வேகமாக பரவி வந்ததுடன் பிரதேசவாசிகள் பொலிஸாருடன் இணைந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும் அது மிகவும் கடினமான பணியாக இருந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply