• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில்  மாற்றம்  ஏற்படவுள்ளதாக  இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

மேலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்  புதிய விலை 458 ரூபாவாகும்.

மேலும் மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply