• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

இலங்கை

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் தொல்லியல்சார் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளோம்.

இந்த நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட வேண்டும்.
புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அடிப்படை விதிகளைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெற்று வருகின்றோம்.
மேலும் ‘பிக்கு கதிகாவத்’ சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களிடம் கோரியுள்ளோம்.

ஆனால் இந்த சட்டங்களை உலுவாக்குவது எளிதான காரியம் அல்ல” என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply