• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்து பகலில் படித்த இளைஞர் - ஒரே நேரத்தில் 2 அரசு வேலை

சினிமா

இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துவிட்டு பகலில் படித்த இளைஞர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அரசு வேலை கிடைத்துள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானா மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலே பிரவீன் குமார் (31). இவரது தந்தை கட்டட மேஸ்திரியாகவும், தாயார் பீடி சுற்றும் வேலை செய்து வருகிறார்கள்.

இவரது குடும்பம் வறுமையில் இருந்தாலும் பிரவீன் குமாரை அவரது பெற்றோர், எம்.காம், பி.எட், மற்றும் எம்.எட் வரை படிக்க வைத்துள்ளனர். இருந்தாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, அரசு வேலைக்காக பிரவீன் குமார் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், வேலையில்லாமல் எப்படி படிக்க முடியும் என்று யோசித்த அவர், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேர வாட்ச்மேன் பணிக்கு விண்ணப்பித்தார்.

அப்போது அவருக்கு அந்த வேலை கிடைத்ததால் இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டே பகலில் படித்து வந்தார்.

பின்னர், தனது விடா முயற்சியின் மூலமாக முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை பேராசிரியர் என்ற இரண்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார்.

பிரவீன் குமாருக்கு வாட்ச்மேன் வேலையில் ரூ.9 ஆயிரம் மட்டுமே சம்பளம் கிடைத்து வந்தது. தற்போது இவருக்கு ரூ. 73 ஆயிரம் முதல் ரூ.83 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்துள்ளது. இளநிலை விரிவுரையாளர் பணியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், "நான் இரவில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் போது வேலை பார்ப்பதாக நினைக்கவில்லை. படிப்பதற்கு நேரம் கிடைத்துவிட்டது என்று தான் எண்ணினேன்" என்றார். 
 

Leave a Reply