• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கறுப்பின வாக்காளர்களை இலக்குவைக்கும் டிரம்பின் ஆதரவாளர்கள்

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலி வீடியோக்கள் மற்றும் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
  
2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப் தற்போது கற்றுப்பின மக்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான போலியான படங்கள் கறுப்பினத்தவர்களின் ஆதரவு டிரம்பிற்குள்ளது என்பதை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக பிளக்வோட்டர்ஸ் மட்டர் அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் இவ்வாறான படங்கள் உண்மையானவை என நான் தெரிவிக்கவில்லை என இந்த படங்களை உருவாக்கி ஒருவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் உருவாக்கும் போலி படங்கள் அமெரிக்க தேர்தலிற்கு முந்தைய புதிய போக்காக காணப்படுகின்றது.

இவ்வாறான படங்களை உருவாக்கியவர்களில் மார்க்கை குழுவினர்களும் உள்ளனர் என்றும் , இவர்கள் டிரம்ப் கறுப்பின பெண்களுடன் காணப்படுவது போன்ற படத்தை உருவாக்கி முகநூலில் பதிவிட்டனர்.

அதேசமயம் இந்த குழுவினரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றதாகவும் கூறப்படும் நிலையில், டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply