• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் 365 நாட்களும் விலை அதிகரிப்பு கலாசாரமே காணப்படுகின்றது

இலங்கை

”சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ராவணவௌ கனிஷ்ட கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பால் தேனீர், தேனீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள், சாப்பாடுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. 24 மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும்
நாட்டில் விலை அதிகரிப்பு கலாசாரமே காணப்படுகின்றது. விலைவாசி உயர்ந்து, மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், அரசிடம் இதற்கான பதில் இல்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்ற பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். ரணசிங்க பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் பின்னர், நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுக்கொள்ளுகின்ற எந்த திட்டத்தையும் அரசாங்கங்கள் அறிமுகப்படுத்தவில்லை.இவ்வாறு நாடு செல்லுமாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது.

உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது.
மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply