• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர்

தற்போதைய தாய்லாந்து மன்னரின் வாரிசு ஒருவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், நாட்டின் எதிர்கால மன்னராகும் வாய்ப்பை இழக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து மன்னரின் பிரிந்து சென்ற மகனான 42 வயது Vacharaesorn Vivacharawongse என்பவர் அமெரிக்கரான Elisa Garafano என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.
  
Vivacharawongse-வின் தாயாரை தற்போதைய தாய்லாந்து மன்னர் விவாகரத்து செய்த நிலையில், தமது மூன்று சகோதரர்களுடன் Vivacharawongse வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

ஆனால் இளவரசர் ஒருவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்டால் நாட்டின் மன்னராகும் தகுதியை தாமாகவே இழக்க நேரிடும் என்பது விதியாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன்னராகும் வாய்ப்பை இழக்க விரும்பாத இளவரசர் Vivacharawongse தற்போது தமது அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக நெருக்கமான நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, Garafano விவாகரத்து பெறுவதற்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமது பிள்ளைகள் இருவருடன் தம்மையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vivacharawongse தமது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிய விரும்பவில்லை என்றும், அவர்கள் தற்போதும் ஒன்றாகவே வாழ்வதாகவும், ஆனால் தாய்லாந்தின் மன்னராகும் வாய்ப்பையும் அவர் இழக்க விரும்பவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனாலையே, தமது அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அவர் சமீப நாட்களில் கூறி வருவதாகவும், தமது குடும்பம் தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளவரசர் Vivacharawongse தமது சகோதரர்களுடன் நாட்டைவிட்டு வெளியேறியதும், தாய்லாந்தின் அடுத்த வாரிசாக இளவரசி Bajrakitiyabha என்பவரை மன்னர் அறிவித்தார்.

ஆனால் 2022 டிசம்பர் மாதம் நோய்வாய்ப்பட்ட Bajrakitiyabha, தற்போது கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்லாந்துக்கு திரும்பிய இளவரசர் Vivacharawongse பட்டத்து இளவரசர் என அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

இளவரசர் Vivacharawongse தாய்லாந்தின் மன்னராக பொறுப்புக்கு வந்தால், அவரது தந்தையின் 40 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்கும் அவர் அதிபதியாவார் என்றே கூறப்படுகிறது. 
 

Leave a Reply