• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இவனுக்கு நடிப்பே வராது.. அந்த நடிகரை கூட்டி வாங்க!.. ரஜினியை மோசமாக திட்டிய பாலச்சந்தர்…

சினிமா

நடிகர் ரஜினியை நடிகனாக பார்த்ததும், அவரை ஒரு நடிகராக வளர்த்ததும் இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே. ரஜினி திரைப்பட கல்லூரில் நடிப்பு பயிற்சி முடித்த நிலையில் அங்கு சிறப்பு விருந்தினராக போன பாலச்சந்தருடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார் ரஜினி. அப்போதே ரஜினியை அவர் கணித்துவிட்டார்.

ரஜினியின் உடல் மொழியும், அவர் பேசும் ஸ்டைலும் அவருக்கு பிடித்துப்போனது. எனவேதான், அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவரை அறிமுகம் செய்தார். அதோடு ‘உன்னை இப்படியே விட்டுவிடுவேன் என நினைக்காதே.. தொடர்ந்து பயன்படுத்துவேன்’ என ரஜினிக்கு வாக்குறுதியும் கொடுத்தார்.

சொன்னது போலவே, அடுத்து ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, அதில், தமிழில் ஜெய் கணேஷ் நடித்த வேடத்தை ரஜினிக்கு கொடுத்தார். மூன்றாவது படமாக கமல், ஸ்ரீதேவியுடன் ‘மூன்று முடிச்சி’ படத்தில் நடிக்க வைத்தார். இப்படி தொடர்ந்து ரஜினியை 3 படங்களில் பாலச்சந்தர் பயன்படுத்தினார்.

ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பார் என்கிற விஷயம் அவருக்கு தெரியவர ‘மூன்று முடிச்சி’ படத்தில் அவர் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கி போட்டு பிடிப்பதை பல கோணங்களிலும் படம்பிடித்தார். இப்படி ரஜினி எப்படிப்பட்ட நடிகர் என்பதை ரசிகர்களுக்கு காட்டியவர் அவர்தான்.

ரஜினி பின்னாளில் வளர்ந்த பின் அவரை பற்றி பாலச்சந்தர் சொன்னது இதுதான். சினிமாவில் ஒரு வில்லன் நடிகர் ஹீரோவாக மாறுவது என்பது சகஜம்தான். ஆனால், நிறைய படங்களில் வில்லனாகவே நடித்தவர் ஒரு சூப்பர்ஸ்டாராக மாறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ரஜினி அதை செய்து காட்டினார்’ என கூறினார்.

ரஜினி தன் திரை வாழ்வில் ஒரு இயக்குனரிடம் அதிக திட்டுக்களை வாங்கினார் என்றால் அது பாலச்சந்தரிடம் மட்டும்தான். அவர்கள் படத்தை அவர் இயக்கிய போது ஒரு காட்சியில் ரஜினியின் முகத்தில் அவர் எதிர்பார்த்த பாவணை வரவில்லை. 5 டேக் வரை எடுத்தும் ரஜினிக்கு அதுவரைல்லை. அதில் கடுப்பான பாலச்சந்தர் ‘இவனுக்கு நடிப்பே வராது. இவன வீட்டுக்கு அனுப்பிட்டு ஜெய் கணேஷை கூட்டிட்டு வாங்க’ என சொல்லிவிட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்தே போய்விட்டார். ஆனால், அவரின் மனதுக்குள் அது உறுத்துலாகவே இருந்துள்ளது.

பின்னாளில் ரஜினி பெரிய நடிகர் ஆனதும் ஒருநாள் ‘அவர்கள் படப்பிடிப்பில் உன்னை நல்லா திட்டிட்டேன் இல்ல’ என அவர் கேட்க, ரஜினியோ சிரித்துக்கொண்டே ‘ஆமாம் சார்.. திட்டுனது மட்டுமில்ல. எனக்கு பதிலா ஜெய் கணேஷ கூட்டிட்டு வாங்கன்னு சொன்னிங்க. அது பரவாயில்ல சார்’ என சிரிக்க அப்போதுதான் பாலச்சந்தர் ஆறுதலடைந்தாராம்.
 

Leave a Reply