• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவன். 

சினிமா

கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவன். அவரே பாடல் எழுதுவார். மியூசிக் போடுவார். படத்தையும் இயக்குவார். அவரே நடிப்பார். அவரே தயாரிப்பார். டி.ராஜேந்தர் மாதிரி எல்லா வேலைகளையும் செய்யக்கூடியவர். கங்கை அமரன் தான் நடிகர் ராமராஜனை எல்லா ரசிகர்களுக்கும் தெரிய வைத்தார்.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் ஒரு டவுசர் ஒரு துண்டு மட்டும் பயன்படுத்தி பட்டி தொட்டி எங்கும் எல்லா மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்தார். இந்தப் படத்தில் மதுர மரிக்கொழுந்து வாசம் என்ற பாடலை எழுதியவர் கங்கை அமரன் தான்.

மதுரை தெப்பக்குளத்துல பாடலை எடுத்திருப்பாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் கோபுரத்தை மட்டும் காட்டுவாங்க. கோவிலுக்குள்ள படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கல. அதனால மேல் தளத்தில் போய் ஆடிப் பாடுவது போல படம் பிடிச்சிருப்பாங்க. இந்தப் பாடலில் ரொம்பவே இளமையான குரலில் பாடகி சித்ரா பாட மனதைக் கிறங்கடித்தது. கூடவே மனோவும் சேர்ந்து பாடியிருப்பாரு.

இந்தப் பாடலை இளையராஜா மாயமாளவக்கௌளை என்ற ராகத்தில் அருமையாக இசை அமைத்திருப்பார். இது 15வது மேளகர்த்தா ராகம். பாட்டுக் கத்துக்கப்போறவங்களுக்கு முதலாவதாக இந்த ராகத்தில் தான் சொல்லிக் கொடுப்பாங்க. கர்நாடக சங்கீத ராகத்தை எடுத்துக்கிட்டு அதுக்குள்ள கிராமியத்தனமான அழகான ராகத்தைப் பாடலாக கொடுத்திருப்பாரு. இந்தப் பாடல்ல மாவிளக்கு போடுறதுக்கு என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் சொல்லிருப்பாரு.

பச்சரிசி மாவு வச்சி, சர்க்கரையில் பாகு வச்சி, சுக்கு இடிச்சி, மிளகு இடிச்சி பக்குவமா கலந்து வச்சி அம்மனுக்கு மாவிளக்கு எடுக்க வந்தோம்… அம்மனவ எங்களையும் காக்க வேண்டும்… சாமி..ன்னு தொகையறா பண்ணிருப்பாரு. அதுக்கு அப்புறம் இளையராஜா செனாய், ஸ்ட்ரிங்ஸ்னு வாத்தியக்கருவிகள்ல ஜாலம் காட்டியிருப்பாரு. பெண்களோட ஹம்மிங் ரொம்ப சிறப்பா இருக்கும்.

அடுத்ததா பல்லவி வரும். மதுர மரிக்கொழுந்து வாசம்.. என் ராசாத்தி உன்னுடைய நேசம். மானோட பார்வை, மீனோட சேரும். மாறாம என்னைத் தொட்டுப் பேசும். இது மறையாத என்னுடைய பாசம்.

2வது சரணத்துல கடைசில மனோ பாடுவாரு. நீ தானே என்னுடைய ராகம்… என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம். ஏழேழு ஜென்மம் உன்னை பாடும். இது உன்னோட பாட்டுக்காரன் பாட்டு.

என் மனசேதோ கிறங்குதடி… சிறகடிச்சி பறக்குதடி… அப்படின்னு பாடுவாரு.

இடையில பொட்டுன்னா பொட்டு வச்சி வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு… பட்டுன்னு சேலையைக் கட்டி எட்டு வச்சி நடந்துபுட்டு…ன்னு பாடல் வரிகள் வெகு அழகாக பரபரன்னு ரசிக்கும் விதத்தில் செல்லும். இந்த வரிகளில் வெட்டுனா, எட்டுனா, பட்டுனான்னு எழுதிட்டார் கங்கை அமரன். இது அவசரத்தில எழுதிருக்கலாம். ஆனா இதுக்கு இளையராஜா எப்படி அனுமதிச்சார்னு தான் தெரியல. இன்னும் கூட நல்ல வரிகளாப் போட வச்சிருக்கலாம். இருந்தாலும் அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் மனசெல்லாம் வாசம் வீசும் சுகமான ராகம் தான்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply