• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமலுக்காக இயக்குனரையே மாற்றிய தயாரிப்பாளர்.. 5 வயசிலேயே அசத்திய உலக நாயகன்…

சினிமா

5 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர் கமல்ஹாசன். இவர் நடித்த முதல் திரைப்படமே ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா. முதல் படத்திலேயே ஜெமினி கணேசன் – சாவித்ரி ஜோடிக்கு மகனாக நடித்தார். இந்த படத்தில் அவர் வாய்ப்பை பெற்றதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

ஏவி மெய்யப்ப செட்டியாரின் மனைவியை சந்திக்க சென்ற ஒருவர் அவருடன் சிறுவன் கமலை அழைத்து சென்றுள்ளார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிறுவன் கமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அதைப்பார்த்த எவி மெய்யப்ப செட்டியாரின் மனைவி ‘இந்த சிறுவன் யார்?. ஏன் இப்படி கோபமாக அமர்ந்திருக்கிறான்’ என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ‘இவன் எனக்கு தெரிந்த நபரின் மகன். மெய்யப்ப செட்டியாரை பார்க்க போகிறேன் என தெரிந்ததும் என்னுடன் வந்துவிட்டான். இன்னும் அவன் அவரை பார்க்கவில்லை அல்லவா!. அதுதான் கோபம்’ என சொல்ல, ‘உனக்கு தெரியும்?’ என மெய்யப்ப செட்டியாரின் மனைவி கேட்க கமலோ ‘எனக்கு நடிக்க தெரியும். பாட தெரியும்’ என சொல்ல எங்கே பாடிக்காட்டு என சொல்ல கமலும் பாடினர்.

அதை மிகவும் ரசித்த அவர் அப்போது அங்கே வந்த சரவணனிடம் ‘ இந்த சிறுவனை அப்பாவிடம் அழைத்து செல்’ என அவர் சொல்ல அவர் செட்டியாரிடம் கமலை அழைத்துப்போனார். சிறுவன் கமலை பார்த்ததும் செட்டியாருக்கு மிகவும் பிடித்துப்போனது. அதோடு, அவரிடமும் கமல் நடித்தும், பாடியும் காட்ட ‘இவனுக்கு நல்ல திறமை இருக்கு. களத்தூர் கண்ணம்மா படத்தில் அந்த சிறுவன் வேடத்தில் இவனையே நடிக்க வைப்போம். இவனை அழைத்து சென்று ஜெமினி, கணேசன், இயக்குனர் எல்.வி.பிரசாத்’ என எல்லோரிடம் காட்டும் என சொன்னார்.

அவர்களுக்கும் கமலை பிடித்துப்போக படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு பாதி முடிந்த எடுத்தவரை போட்டு பார்த்தார் செட்டியார். ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலில் கமல் நடித்தவிதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது அந்த பாடல் ஒன்றைரை நிமிடம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

எனவே, இயக்குனர் பிரசாத்தை அழைத்து ‘சிறுவன் கமலை முழு பாடலிலும் நடிக்க வையுங்கள். அவனுக்கு இன்னும் சில காட்சிகளை சேருங்கள்’ என சொல்ல, இதில் பிரசாத்துக்கு உடன்பாடு இல்லை. எனவே, இந்த படத்திலிருந்து அவர் விலகினார். அதன்பின் மீதிப்படத்தை பீம்சிங் இயக்கி இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply