• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

சினிமா

விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரை பற்றிய பல செய்திகள் வெளியே கசிந்து வருகிறது. அவரை பற்றி நன்கு தெரிந்த பலரும் ஊடங்களில் அவரை பற்றி பேசி வருகின்றனர். அதில், அவர்கள் பல தகவல்களை சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், பல வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தே பேட்டி கொடுத்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் ரைஸ் மில்லை நடத்தி வந்தபோது எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறார். அதன்பின் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சியை பார்த்து அவருக்கும் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவின் இரும்பு கதவுகள் விஜயகாந்துக்காக திறக்கப்படவில்லை. அப்போது அவரின் பெயர் விஜயராஜ். பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டார். பல அவமானங்களையும் சந்தித்தார். பலரும் அவரை அசிங்கப்படுத்தினார்கள்.

ஆனால், நம்பிக்கையுடன் போராடி இனிக்கும் இளமை, சாட்சி என சில படங்களில் நடித்தார். ஆனாலும் எடுபடவில்லை. அப்போது அவர் விஜயகாந்தாக மாறியிருந்தார். அதன்பின், எஸ்.ஏ.சியின் இயக்கத்தில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அதன்பின் படிப்படியாக முன்னேறி சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த விஜயகாந்த் மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் மறைந்தும்போனார். இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ‘ என் வீட்டுக்கு அருகே எங்க வீட்டு பிள்ளை படம் ஓடியபோது சண்டை காட்சிகளுக்காகவே 120 முறை அப்படத்தை பார்த்தேன்.

அதேபோல், எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி போன்ற படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அதன்பின் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தை 70 முறை பார்த்தேன். நானும் எம்.ஜி.ஆரின் ரசிகன் இல்லை.. வெறியன்’ என கூறினார்.
 

Leave a Reply