• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்.ஆர்.ஈஸ்வரியை வெளியே துரத்திய ஒலிப்பதிவாளர்… அப்புறம் பாடகியானது எப்படி தெரியுமா?…

சினிமா

தமிழ் சினிமாவில் திரைப்பட வெற்றிக்கு அதில் உள்ள பாடல்களும் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு பாடலுக்கு இசை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு அப்பாடலை பாடுபவர்களின் குரலும் முக்கியம். தமிழ் சினிமாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், வாணிஸ்ரீ போன்ற பல பாடகர்களின் குரல் அப்படத்தில் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த வகையில் தனது காந்த குரலால் மக்கள் மனதை கட்டி போட்டவர்தான் எல்.ஆர்.ஈஸ்வரி. இவரின் பாடல்கள் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி, பக்தி பாடல்களாக இருந்தாலும் சரி அனைத்து பாடல்களின் மூலம் மக்களை தன் வசம் இழுத்தவர்.

இவர் பாடிய பக்தி பாடல்கள் பெரிதளவில் மக்களால் ரசிக்கப்பட்டது. இவரின் பாடலான முத்து குளிக்க வாரிகளா பாடல் இன்று வரையிலும் மக்களால் ரசிக்கப்படுகிறது. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் கோரஸ் பாடகியாகதான் அறிமுகமாகியுள்ளார். ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போல இவரும் முறையாக பாடல் கற்று கொள்ளாதவராம். தனது கேள்வி ஞானத்தாலேயே இவர் பாடல் பாட வந்தவர்தானாம்.

தனது காந்த குரலின் மூலம் தனது பள்ளி பருவத்திலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசையும் வாங்குவாராம். இவரது தாயும் ஒரு கோரஸ் பாடகி என்பதால் அவர் பாடல் பாட செல்லும் போது இவரும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு முறை இவரது தாயார் திருச்சி லோகநாதனிடம் தனது மகளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பை கேட்டுள்ளார்.

அதனால் திருச்சி லோகாநாதன் டி.ஆர்.மகாலிங்கத்திடம் பாடல் பாட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அவரும்  தெருப்பாடகன் என்கிற திரைப்படத்தில் பாடல் பாட எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் அப்பாடலின் ஒத்திகையின் போது ஒரு குரல் கேட்டது. அப்பாடலின் ஒலிப்பதிவாளரான டி.எஸ்.ரங்கசாமி திடீரென ‘இது யார் குரல்? கிணற்றுக்குள் இருந்து பாடுவது போன்று இருக்கிறது, அவரை வெளியே அனுப்புங்கள்’ என கூறிவிட்டாராம்.

இதனால் எல்.ஆர்.ஈஸ்வரி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். அப்போது அவரது தந்தை, தாய் என அனைவரும் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் ஒரு கதவு அடைத்தாலும் மற்றொரு கதவு திறக்கும் எனும் வசனத்திற்கு ஏற்றாற் போல் இவருக்கு பின்னர் நல்ல இடத்து சம்பந்தம் எனும் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
 

Leave a Reply