• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்துக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சினிமா

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 -வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களான வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ். ராஜசேகரன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
  
மேலும், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அப்போது சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "கேப்டன் என அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர். பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர். 2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர். 2011 -ம் ஆண்டு சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர்" என்று விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டினார்.

பின்னர், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜயகாந்த் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். 
 

Leave a Reply